எடிசலாட் இலங்கை

இலங்கையில் எடிசலாட் நிறுவனம்

ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாக கொண்டு இயங்கும் எடிசலாட் நிறுவனமானது அதன் செயற்பாடுகளை 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்தது. மில்லிகொம் இன்டர்நெ~னல் செல்லுலர் நிறுவனததின் துணை நிறுவனமான டிகோ நிறுவனத்தின் 100% பங்குகளை கொள்வனவு செய்ததன் பின்னரே அது இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது இந்த கம்பனியானது இலங்கையின் முதலாவது செல்லிட தொலை பேசி வலையமைப்பாக கருதப்படுகின்றது. இந்த வலையமைப்பானது 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் இந்த வலையமைப்பானது செல்டெல் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.

எடிசலட் நிறுவனமானது ஐக்கிய இராச்சியத்தியத்தின் தொலைத்தொடர்பாடல் கூட்டுத்தாபனத்தின் முழுமையான உரிமையுடன் இயக்கப்படுகின்றது. அத்துடன் மத்திய கிழக்குப் நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஆசிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலும் அதன் சேவைகளை விரிவுபடுத்தி உள்ளது. 16க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 167 மில்லியன் உறுப்பினர்களை கொண்டிருப்பதுடன் இந்த பிராந்தியதில் உள்ள உறுப்பினர்களுக்கு சிறந்த சேவையையும் ஒற்றுமைக்கான சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது.

எடிசலட் நிறுவனமானது முழுமையாக பரந்தளவில் தங்குதடையற்ற சேவைகளை வழங்குகின்றது. மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மேலும் பல சேவைகளை வழங்குகின்றது. நாங்கள் சுறுசுறுப்பாக இயங்குவதுடன் எங்களுடைய வாடிக்கையாளர் சேவை மூலமாக வாடிக்கையளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான

எங்கள் நடவடிக்கைகளின் மகுட வாசகம் "இது உங்களைப் பற்றியது" என்பதாகும். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் இதயங்களை இணைப்பதற்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்துகிறோம்.

எமது நோக்கு

எந்தவொரு காரணத்தையோ அல்லது தூரத்தையோ அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படாத ஒரு உலகத்தை உருவாக்குதல். மக்கள் எந்தவித கஸ்டங்களுமின்றி உலகம் முழுவதும் செல்லக்கூடியதும், தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், செல்கின்ற இடங்களில் புதிய நண்பர்களை ஏற்படுத்துவதற்கும், புதிய இரசனைகளை விருத்தி செய்வதற்கும் உதவுதல்.

எந்த அளவிலான வியாபாரங்களும் தூரத்தை காரணமாகக் கொண்டு மட்டுப்படாமல் சந்தைகளைச் சென்றடைவதற்கான சந்தரப்பம். புதிய பொருட்கள் சேவைகளை ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தேவையான விதத்தில்வழங்கக்கூடியவாறு, புதிய தொழிநுட்பங்கள் வழியாக உலகளாவிய ரீதியில் புதிய வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல்.

எமது பணிநோக்கு

மக்கள் ஒருவரையொருவர் சென்றடையக்கூடிய சந்தர்ப்பங்களை விரிவாக்குதல். எட்டிசலாட்டானது சிறந்த வலையமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் மக்கள் தங்களை விருத்தி செய்து கொள்வதற்கும், கற்றலுக்கும் துணை புரிகின்றோம்.

ஆற்றல்

எங்களது வியாபாரத்தின் சிறந்த பலன்களை அடைந்து கொள்வதற்கு ஆற்றலையும் ஆற்றலின் விளைவுகளையும் நாம் வெகுவாக மதித்து வளர்த்தெடுக்கின்றோம். நாம் எதிர்கால சவால்களையும் சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருகின்றோம்.

திறந்த மனப்பான்மை

நாங்கள் கம்பெனி என்ற வகையில் சமூக ஈடுபாட்டுடன் நட்பு ரீதியான சிறந்த உறவுகளை, வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பேணி பாதுகாக்கின்றோம். நாங்கள் மக்கள் மத்தியில் தெளிவான முறையிலும் நேரடியாகவும் தொடர்புகளை கையாண்டு வருவதுடன் நேர்மையானதும் நியாயமானதுமான வியாபார தொடர்புகளை மேற்கொள்கின்றோம்.

செயற்படுதன்மை

எங்களுடைய இலக்கு மக்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி அவர்களின் இலக்குகளை அடைவதற்கு வினைத்திறனுடன் உதவுவதாகும். நாங்கள் எப்போதும் வாக்குறுதியளித்த விடயங்களையே வழங்கி வருகின்றோம்.

Our contact details :

எங்களைத் தொடர்பு கொள்ள:
எட்டிசலாட் லங்கா பிரைவேட் லிமிடட்,
ரொட்டுன்டா டவர்ஸ்,
இல.109, காலி வீதி, கொழும்பு 03

பொது தொலைபேசி எண்-0722541541
ஹாட் லைன் - 1727

TOP