எடிசலாட் அட்நம்பர் சேவை

அறிமுகம்

வாடிக்கையாளர்கள், அதாவது  நில விற்பனையாளர்கள், வாகன விற்பனையாளர்கள் போன்றோர் தங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்பாததுடன்,  வியாபார நோக்கத்திற்காக தற்காலிக இணைப்பொன்றைப் பெறவும் விரும்புகின்றனர். அதற்கான தீர்வாக, ஒரு மிஸ்ட் கோல் செய்வதன் மூலம் ‘எடிசலாட் அட்நம்பர்’ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். அதன்போது வாடிக்கையாளரின் உண்மையான தனிப்பட்ட நம்பருக்கு மெய்நிகர் நம்பரொன்று அனுப்பப்படும்.

இத்தயாரிப்பு தொடர்பான விபரங்கள்

  1. ஈஎஸ்எல் அட்நம்பர் ஹொட்லைனுக்கு - 0720 444 888 - மிஸ்ட் கோல் ஒன்றை வழங்குவதன் மூலம் எந்தவொரு வாடிக்கையாளரும் எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் அட்நம்பர் ஒன்றைப் பெறுவார்.
  2. பெறுகின்ற அட்நம்பரானது ( உதா -0727940310 ) பின்தளத்திலிருந்து தன்னிச்சையாக வாடிக்கையாளரது உண்மையான தனிப்பட்ட நம்பருக்கு அனுப்பப்படும்.
    1. உதா – ஒரு வாடிக்கையாளர் 0777456456 என்ற டயலொக் இலக்கத்தைப் பயன்படுத்துபவர் எனின், அவர் 0720 444 888 என்ற இலக்கத்திற்கு ஒரு மிஸ்ட் கோல் செய்தவுடன் எஸ்எம்எஸ் ஊடாக ஒரு அட்நம்பரைப் பெறுவார். அந்த அட்நம்பரானது தன்னிச்சையாக அவரது டயலொக் நம்பருக்கு அனுப்பப்படும்.
  3. ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் ஒரு மெய்நிகர் எண்ணை மட்டுமே பெற முடியும்.
  4. அட்நம்பர் ஒதுக்கப்பட்டதும், புதிய இலக்கம் மற்றும் செல்லுபடியாகும் காலம் போன்ற விபரங்கள் SMS மற்றும் IVR வழியாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும். (60 நாட்களுக்கு பரிவர்த்தனைகள் இடம்பெறாவிட்டால், அட்நம்பர் தன்னிச்சையாகவே காலாவதியாகும்.)
  5. இச்சேவையை அனுபவிப்பதற்கு வாடிக்கையாளர், அட்நம்பரை ரூ.100/= ஆல் ரீலோட் செய்தல் வேண்டும்.
  6. அட்நம்பருக்கு வரும் எல்லா அழைப்புகளும் வாடிக்கையாளரின் உண்மையான தனிப்பட்ட இலக்கத்திற்கு அனுப்பப்படும்.
  7. பொதுவான அனுப்பும் கட்டணங்கள் அறவிடப்படும். ( எந்தவொரு வலையமைப்பிற்கும் ரூ.1.50 + வரி)
  8. இந்த அட்நம்பரை இரத்துச் செய்ய வேண்டுமெனின் ““deact” என டைப் செய்து அட்நம்பர் ஹொட்லைன் இலக்கம் 0720 444 888க்கு எஸ்எம்எஸ் செய்யுங்கள்.
TOP