எட்டிசலாட் கிளிக் அப்

CliQவலையமைப்பைப் பயன்படுத்துவதற்கான ஒரு நவீன முறையே இந்த கிளிக் அப் ஆகும். எட்டிசலாட் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வலையமைப்பு பொதிகளை இந்த மொபைல் ‘அப்’பை தரவிறக்கம் செய்வதன் மூலம் கொள்வனவு செய்ய முடியும்.

மெகாபைட்ஸ் மற்றும் ஜிகாபைட்ஸ் போன்ற பொதிகளை அடிப்படையாகக் கொண்ட வன்பொருள் தரவுகளை வாங்குவதைத் தவிர்க்கும் இந்த கிளிக் ‘அப்’பானது மொபைல் இன்டர்நெட் பொதிகளை கொள்வனவு செய்வதற்கான நெகிழ்வானதும் வெளிப்படையானதுமான அணுகுமுறைகளை வழங்குகின்றது.

இந்த கிளிக் ‘அப்’பில் நீங்கள் செய்யவேண்டியது, உங்களது இன்டர்நெட் தேவைக்கேற்ற மிகப் பொருத்தமான கால அவகாசத்தை தெரிவு செய்தல் வேண்டும். நீங்கள் உங்களது தேவைக்கேற்ப எந்தவொரு கால அவகாசத்தையும் தெரிவு செய்யலாம். அது ஆகக் குறைந்தது 5 நிமிடங்களோ அல்லது ஆகக் கூடியது ஒருசில மணித்தியாலங்களோ அல்லது ஒருசில நாட்களாகக் கூட இருக்கலாம். உங்களது நேர பொதி காலாவதியானதன் பின்னர், நீங்கள் இன்னுமொரு புதிய கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு மீள் இணைப்புச் செய்யப்படுவதற்காக அறிவுறுத்தப்படுவீர்கள்.
எவ்வாறு இதனை செயல்படுத்துவது?

 • கூகுள் பிளே ஸ்டோரின் இலிருந்து கிளிக் மொபைல் ‘அப்’பை தரவிறக்கம் செய்யவும். https://goo.gl/TeuQcx.
 • மொபைல் எண்ணை ‘அப்’ இன்டர்பேஸில் டைப்செய்வதன் மூலம் பதிவு செய்யலாம்.
 • உங்களுக்குத் தேவையான நேர அளவை எவ்வாறு கொள்வனவு செய்யலாம் என்பது தொடர்பாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விளக்கத்தை நன்கு வாசிக்கவும்.
 • உங்களது நேர அளவை தெரிவு செய்து செயற்படுத்தவும்.
 • உங்களது நேர அளவும் முற்கொடுப்பனவு கணக்கு மீதியும் ‘அப்’பில் காட்டப்படும்.
 • தற்போதைய பொதியை நீடிக்கலாம் அல்லது தேவைக்கேற்றவாறு புதிய பொதியை கொள்வனவு செய்யலாம்.

தயாரிப்புகள் தொடர்பான விபரங்கள்

 • அன்ட்ரொய்டை பயன்படுத்தும் எட்டிசலாட் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
 • நேரத்தை அடிப்படையாகக் கொண்ட இன்டர்நெட் பொதிகளை கொள்வனவு செய்ய முடியுமென்பதுடன் அவர்களது எட்டிசலாட் முற்கொடுப்பனவு கணக்கு மீதிகள் / ரீலோட் மூலம் கட்டணம் அறவிடப்படும்.
 • அனைத்து அரசாங்க வரிகளும் விலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 • ஒன்றுக்கு மேற்பட்ட பொதிகளைக் கொள்வனவு செய்ய முடியுமென்பதுடன் அதன் கால அளவும் சேகரிக்கப்படும்.
 • பயன்படுத்தக்கூடிய மிகுதி கால அளவும், எட்டிசலாட் முற்கொடுப்பனவு கணக்கு மீதியும் இந்த ‘அப்’பில் காட்டப்படும்.
 • எந்தவொரு நியமத் தரவுத் திட்டங்களும் இந்த ‘அப்’புடன் பயன்படுத்தப்படலாம். (ரூ.19, Rs.49, Rs.99, Rs.299, etc.)
 • ஃபோன் ஒத்திசைவு, பயன்பாடுகளின் புதுப்பிப்புகள் காரணமாக ஏற்படும் கட்டணங்கள் என்பன, இந்த ‘அப்’பிற்காகப் பதிவுசெய்ததன் பின்னர் இணையத்தில் உலாவுவதற்கான கட்டணம் அறவிடப்படுவது தடுக்கப்படும். (உங்களது முற்கொடுப்பனவு கணக்கில் ரீலோட் செய்யப்பட்ட பணத்திலிருந்து அறவிடப்படுதல்)
 • நீங்கள் மீண்டும் கொடுப்பனவு செய்யும் தரவினைப் பெற விரும்பினால் ‘அப்’ பதிவு செய்யப்படாமல் இருக்க வேண்டும்
 • பிரத்தியேக இன்டர்நெட் சலுகைகளைப் பெற இந்த ‘அப்’பினைப் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
TOP