புதிய எதிர்பார்ப்பு, புதிய பார்வை

ஒரு பொறுப்புமிக்க நிறுவனம் என்ற வகையில் எடிசலட் வலையமைப்பானது தடைகளையும் தூரங்களையும் கடந்து உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு தனது சேவைகளை வழங்குகின்றது. “இது உங்களை பற்றியதே” என்ற கருபொருளை அடிப்படையாக கொண்டு நாங்கள் மக்களுக்கு எங்களது சேவையை கொண்டு செல்கின்றோம். எடிசலட் நிறுவனமானது சமூகத்திலும் சுற்றாடலிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்காக சிறந்த விழுமியங்கள் ஊடாக செயற்படுகின்றது. எங்கள் முகாமைத்துவத்தின் மூலமாக எந்த செயற்பாடுகளை செய்தாலும் எங்களது அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலமாக அதனைச் செயற்படுத்துவதுடன் எங்களின் பங்குதாரர்கள் மற்றும் சமூகம், சுற்றாடல் சார்ந்த விடயங்களையும் கௌரவமாக மதிக்கின்றோம். எங்களுடைய கூட்டாண்மை சமூகப் பொறுப்பு அமைப்பு சமூக தளத்தினை அடிப்படையாக கொண்ட முதலீடுகளைச் செய்வதற்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து அதனை செயற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும் மேற்கொள்வதுடன் அதற்கான அனுசணையையும் வழங்குகின்றது. எங்களுடைய முகமைத்துவமும் எங்கள் ஊழியர்களும் தன்னார்வ அடிப்படையில் இச்சேவையை சமூகத்துக்குச் செய்கின்றனர். எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்களை கம்பெனியின் செயற்பாடுகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். எடிசலட் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு பகுதியின் முயற்சியின் காரணமாக நீண்டகால, குறுகிய கால மற்றும் நடுத்தர நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் கல்வி, சமூக/ வாழ்வாதார அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

புதிய எதிர்பார்ப்பு, புதிய பார்வை

புதிய எதிர்பார்ப்பு, புதிய பார்வை என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் எடிசலட் நிறுவனமானது அரச சார்பற்ற நிறுவனமான எஸ்ஓஎம்எஸ் (SOMS Inc) நிறுவனத்துடன் இணைந்து வெசாக் தானதரும நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததுடன் 3000க்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும், கண் பார்வை குறைந்தவர்களுக்கும் இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்கியது. இதற்கான இலவச கண் பரிசோதனை காலி வீதியில் அமைந்துள்ள எடிசலட் ப்ளாக்சிப் ஸடோர் வளாகத்தில் 2013 மே மாதம் 24 தொடக்கம் 26 வரை நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகின்றவர்கள் வெசாக் தின கொண்டாட்டங்களை கண்டு களிப்பதற்கு அதிகளவில் வருகின்ற இடமகையால் எடிசலட் நிறுவனமானது காலி வீதியில் அமைந்துள்ள இந்த இடத்தை தெரிவு செய்தது. இந்த நிகழ்வின் இரறுதியில் 3000 க்கு மேற்பட்ட கண் பார்வை குறைபாடு உடையவர்கள் எடிசலட் நிறுவனத்தின் அனுசரணை காரணமாக தெளிவான கண் பார்வையை பெற்றதுடன் எடிசலட் நிறுவனதிற்கும் எஸ்ஓஎம்எஸ் நிறுவனத்திற்கும் தங்களின் நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

ஒரு பிள்ளைக்கு ஒரு மடிக் கணணி திட்டம் (OLPC - One Laptop Per Child Project) கிராமப்புற பிள்ளைகளின் தகவல் தொடர்பாடல் திறனை விருத்தி செய்து கணணி அறிவினை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம்.

இந்த நிகழ்ச்சி திட்டமானது கிராமப்புறப் பிள்ளைகளின் கணணி அறிவினை விருத்தி செய்வதற்காக செயற்படுத்தப்படும் ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் நொச்சியாகம குகுல்கட்டுவ வித்தியாலயத்தை சேர்ந்த 55 மாணவர்கள் மடிக்கணணிகளை பெற்றுக்கொண்ட அதிஸ்டசாலிகளாக இருந்தார்கள். தரம் 5 வரையான சகல மாணவர்களுக்கும் மடிக்கண்ணிகள் வழங்கப்பட்டதுடன், அக்கண்ணிகளில், அவர்களின் தற்போதைய பாடத்திட்டம், பாட நூல் என்பனவும் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. பிள்ளைகளுக்கான மடிக்கண்ணிகளானது அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதம அதிகாரிகளால் வழங்கி வைக்கபட்டது. அத்துடன் இந்த நிகழ்வில் எடிசலாட் நிறுவனத்தின் பிரதம விற்னை அதிகாரி திரு. சஞ்ஜீவ சமரசிங்க அவர்களும் சிரேஷ்ட முகாமையாளர் கே.எம்.அபேசிங்க அவர்களும் அப்பிரதேசத்தைச்சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

சொந்துருதிரிய - பெண்கள் வலுவூட்டல் மற்றும் நலவாழ்வு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்.

இந்த நிகச்சித் திட்டமானது சந்தைக் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் திட்டமாகும். இந்த நிகழ்ச்சி திட்டமானது கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்துதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது கிராமப்புற இல்லத்தரசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவனையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வீசி எறிகின்ற கழிவுகளைக் கொண்டு எளிதானதும் வசதியானதும் சூழலுக்கு ஏற்ற பைகளை இப்பெண்கள் உருவாக்குகின்றார்கள். இந்த வகையான பைகளை உற்பத்தி செய்வதால் அவர்களுக்கு வருமானம் தரும் ஒரு மார்க்கமாகவும் இது அமைந்துள்ளது. இந்த பைகள் நியாயமான விலைகளில் விற்கப்படுவதுடன் தற்போது எட்டு பெண்கள் இந்த பை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

அறிவு நிலையம் – வளமான நாளைக்கு வழி சமைத்தல்.

எடிசலாட் நிறுவனத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று கல்வி அறிவினை பெற்றுக்கொள்ள வசதியில்லாத மாணவர்களுக்கும்பெரும் எண்ணிக்கையிலான புத்தகங்ளையும், டீவி, டிவிடி பிளேயர், புரஜக்டர மற்றும் இன்னும் பல உபகரணங்ளைக் கொண்டமைந்த வாசிகசாலையையும், கற்றல் உபகரணங்களையும் வழங்கி மாணவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றது. எடிசலாட்டின் ‘அறிவு நிலையம்’ திட்டமானது மிகவும் ஒதுக்கப்பட்ட, பாதிகப்பட்ட பாடசாலைகளில் ஆரம்பிக்கபட்டுள்ளன. இந்த நிலையங்களில் மாணவர்களின் பாடத்திட்டத்துடன் தொடர்புபட்ட வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் முழுமையான அறிவினைப் பெறுவதற்கு இது பெரும் உதவியாக இருக்கின்றது. இவ்கையில் நாடு முழுவதும் ஆறு எடிசலாட் அறிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துணிச்சல்மிக்க இதயங்கள் நிகழ்ச்சித் திட்டம் – வளமான நாளைக்காக நீங்கள் செய்த தியாகத்திற்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.

கூட்டாண்மை சமூகப் பொறுப்பு அமைப்பினது அணுசரணையுடன் “தரு திலேன ரெயக்” என்ற இசை நிகழ்ச்சி, போரினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்ற படை வீரர்களினால் நடாத்தப்பட்டது. இந்த இசை நிகழச்சி மூலமாக சேகரிக்கபட்ட நிதியானது, அநுராதபுரத்தில் அமைக்கப்படவுள்ள ‘அபிமங்சல’ என்ற யுத்த வீரர்களின் வீமைப்புக்காக வழங்கப்பட்டது. இதற்காக எடிசலட் நிறுவனம் 3.5 மில்லியன் ரூபாவை நிர்மாணப் பணிக்காக வழங்கியுள்ளது. இந்த வாசஸ்தலத்துக்கு அபிமன்சல என்ம்ற பெயர் வழங்கப்பட்டதுடன் இந்த கட்டடிடம் அனுராதா புறத்தில் அமைந்துள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சித் திட்டம்

எடிசலாட் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு அமைப்பினதுசெயற்பாடுகளுள் ஒரு பகுதியாக வெள்ளத்தினால் பதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிவாரணங்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டன. வெள்ளதினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் அக்கரைப்பற்று போன்ற இடங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. சுமார் ஆயிரம் ரூபா பெறுமதியான 2000 பொதிகள், பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பொதிகளில் சீனி, தேயிலை, பருப்பு, பால் மா, அரிசி, டின் மீன், பற்பசை, பற்தூரிகை என்பன அடங்கியிருந்தன. இதன் மூலமாக அவர்களுக்கு சுகாதாரமான உணவுகள் கிடைக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

எடிசலட் இந்த விடயங்ளை sms ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து அவர்களையும் இந்த செயற்பாடுகளில் பங்குகொள்ள நடவடிக்கை எடுத்தது. sms மூலமாக மேலும் 1,638,780.00 ரூபாவை சேகரித்து இந்த திட்டம் வெற்றிகரமாக செயற்படுவதற்கு உதவியது. எடிசலாட் அணியினர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் விஜயங்களை மேற்கொண்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கியது. பாதிக்கப்பட்ட நன்கு மாவட்டங்களிலும் உள்ள மக்கள் அதனை ஆர்வத்துடனும் விருப்புடனும் பெற்றுக்கொண்டர்கள்.

TOP