FAQ

ஆம் Hutchison Telecommunications Lanka நிறுவனம் Hutchison telecommunications Lanka நிறுவனம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. Etisalat Sri Lanka நிறுவனம் தற்போது HTLL இன் பூரண உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாக மாற்றமடையும்

எமது பங்குதாரரான CKHH Hong Kong நிறுவனமானது Hutchison telecommunications Lanka நிறுவனத்தின் 85% பங்குகளை தனது உடமையாகக் கொண்டிருப்பதுடன், Etisalat Abu Dhabi நிறுவனமானது HTLL (Hutch Telecom Lanka Limited) இன் 15% பங்குகளைக் கொண்டிருக்கும்.

ஆரம்பத்தில் இரு வலையமைப்புக்களினதும் தொழிற்பாடுகள் வெவ்வேறாகவே முன்னெடுக்கப்படும். அடுத்த கட்டமாக, எதிர்வரும் 12 மாதங்களில் இரு தொழிற்பாடுகளும் ஒன்றாக கூட்டிணைப்புச் செய்யப்படும்

இந்த நடைமுறைக்கு 6 முதல் 12 மாதங்கள் வரை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

இக்கூட்டிணைப்பை அடுத்து, புதிய நிறுவனமானது நாட்டில் 3 ஆவது ஸ்தானத்தில் திகழும் பாரிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்கல் நிறுவனமாக மாற்றமடையும்

ஆம் இரு வலையமைப்புக்களினதும் கோபுர தளங்களும் ஒரு தனித்த, பாரிய 2G/3G வலையமைப்பாக கூட்டிணைப்புச் செய்யப்படும். எனினும், வலையமைப்பின் முழுமையான கூட்டிணைப்பிற்கு 18 மாதங்கள் வரை செல்லலாம்

கூட்டிணைப்புச் செய்யப்பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவக் கட்டுப்பாட்டினை Hutch நிறுவனம் கொண்டிருக்கும், எனினும் Etisalat நிறுவனத்தின் தற்போதைய முகாமைத்துவ அணியும் இதற்குள் உள்வாங்கப்படும்.

புதிதாக வர்த்தகநாமம் எதுவும் தோற்றுவிக்கப்படாது. இவ் நடவடிக்கைகளின் முடிவிலே Hutch என்ற வர்த்தகநாமம் மட்டுமே நிலைபெறவுள்ளதுடன், வர்த்தகமும் இந்த பெயரிலேயே முன்னெடுக்கப்படும். Etisalat என்ற வர்த்தகநாமத்தின் பாவனை, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

புதிய நிறுவனத்தின் கீழ் 078 மற்றும் 072 ஆகிய இரு இலக்கங்களும் தொடர்ந்தும் நிலைபெறவுள்ளதுடன், Etisalat நிறுவனத்தின் தற்போதைய வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் அதே 072 இலக்கத்தை உபயோகிக்க முடியும்.

இல்லை, அவர்கள் தங்களுடைய SIM அட்டைகளை மாற்றம் செய்துகொள்ளத் தேவையில்லை. எனினும், Etisalat வாடிக்கையாளர்களுக்கு 4G சேவையை வழங்க ஆரம்பித்த பின்னர், அவர்கள் தமது இலக்கத்தில் எவ்விதமான மாற்றங்களுமின்றி, 4G USIM ஒன்றை தரமுயர்த்திக் கொள்ள வேண்டி ஏற்படுவதுடன், இது இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படும்.

Etisalat வாடிக்கையாளர்கள் (072) Hutch 4G வலையமைப்பினை உபயோகிக்க முடியும், எனினும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் வலையமைப்புகள் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட பின்னரே இதனை உபயோகிக்க முடியும். வலையமைப்புக்கள் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட பின்னரும், Etisalat வாடிக்கையாளர்கள் 4G சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு தமது தற்போதைய SIM அட்டைக்கு பதிலாக 4G USIM அட்டைக்கு அதனை தரமுயர்த்திக் கொள்ள வேண்டும். இது இலவசமாக விநியோகிக்கப்படுவதுடன், அவர் தொடர்ந்தும் 072 என்ற தனது பழைய இலக்கத்தைப் பேண முடியும். இரு வலையமைப்புக்களும் கூட்டிணைப்புச் செய்யப்படுவதற்கு முன்பதாக Etisalat வாடிக்கையாளர் ஒருவர் Hutch 4G வலையமைப்பினை உபயோகிக்க விரும்பினால், அவர் Hutch 078 4G SIM அட்டையொன்றைக் கொள்வனவு செய்தல் வேண்டும்.

அவர் தொடர்ந்தும் இரு SIM அட்டைகளையும் அல்லது அவற்றில் ஒன்றை மட்டும் உபயோகிக்க முடியும். அது வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது.

Etisalat காட்சியறைகள் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் உள்வாங்கப்படுவதுடன், Hutch வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கும்.

இரு நிறுவனங்களினதும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள கட்டணங்களே தொடர்ந்தும் அறவிடப்படும். நீண்ட கால அடிப்படையில் கட்டணங்கள் மற்றும் சேவை வழங்கல்கள் தேவைக்கேற்றவாறு மீளாய்வு செய்யப்பட்டு, உள்ளிணைக்கப்படும்.

CLIQ App இப்போதைக்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

இல்லை, Hutch அழைப்புக் கட்டணங்களிலோ அல்லது நேர்மாறாகவோ எவ்விதமான அதிகரிப்பும் இடம்பெறாது.

இக்கட்டணங்கள் தொடர்ந்தும் பேணப்படும் அல்லது வாடிக்கையாளர்/சந்தை கேள்வியின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படும்.

ஆம், பணத்திற்கான சிறந்த பெறுமானத்தை வழங்கும் பரந்த வகைப்பட்ட data திட்டங்களை Hutch நிறுவனம் தொடர்ந்தும் வழங்கும்.

கூட்டிணைப்புச் செய்யப்பட்ட நிறுவனம் வெகு விரைவில் பிற்கொடுப்பனவுத் திட்டங்களை வழங்கும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றவாறு சேவை வரிசையானது மீளாய்வு செய்யப்பட்டு, தேவைப்படும் பட்சத்தில் மீள்வடிவமைப்பு செய்யப்படும்.

ஆம், Etisalat வலையமைப்பு தொடர்பான பிரச்சனைகள் முடிந்தளவு விரைவில் சீர் செய்யப்படும்.

Etisalat வாடிக்கையாளர்களுக்கான வலையமைப்பு உள்ளடக்கத்தைப் பேணுவதை உறுதி செய்வதற்காக Hutch நிறுவனம் தொடர்ந்தும் Etisalat கோபுரங்களை உபயோகிக்கும். இரு கோபுர வலையமைப்புக்களும் கூட்டிணைக்கப்பட்ட பின்னர், 072 மற்றும் 078 ஆகிய இரு வாடிக்கையாளர்களுக்கும் மேலும் சிறப்பான வலையமைப்பு உள்ளடக்கத்தை வழங்க முடியும்.

Etisalat வாடிக்கையாளர்களுக்கான வலையமைப்பு உள்ளடக்கத்தைப் பேணுவதை உறுதி செய்வதற்காக Hutch நிறுவனம் தொடர்ந்தும் Etisalat கோபுரங்களை உபயோகிக்கும். இரு கோபுர வலையமைப்புக்களும் கூட்டிணைக்கப்பட்ட பின்னர், 072 மற்றும் 078 ஆகிய இரு வாடிக்கையாளர்களுக்கும் மேலும் சிறப்பான வலையமைப்பு உள்ளடக்கத்தை வழங்க முடியும்.

ஆம், 4G வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு, வலையமைப்புக்கள் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட பின்னர், Etisalat வாடிக்கையாளர்கள் 4G சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும், அவர்கள் தமது SIM அட்டைக்குப் பதிலாக 4G USIM அட்டையொன்றை தரமுயர்த்திக் கொள்ள வேண்டும். இதை அவர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

data இற்கான கேள்வி மற்றும் பிரதேசத்தில் ஸ்மார்ட்போன் பாவனையாளர் ஆகியவற்றின் அடிப்படையில் 2G தளங்கள் 3G அல்லது 4G தளங்களாக தரமுயர்த்தப்படும்.

ஆம், வலையமைப்பு உள்ளடக்கம் விஸ்தரிப்புச் செய்யப்படும். இரண்டும் ஒன்றாக இணைந்த புதிய நிறுவனமானது விசாலமான வலையமைப்பு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.

TOP