About Us

எடிசலாட் - இலங்கை

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கைத்தொலைபேசி வலைப்பின்னல் ஆகும். இந்த வலைபின்னல் ஆனது 1989 ஆண்டு செல்டெல் (CELTEL) என்ற வர்த்தகப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 2007 ஜனவரி 25 முதல் மிலிகொம்(Milicom) நிறுவனமானது ஆசியாவில் தனது சேவைகளுக்கு முடிவு கட்டும் வரை வரை டிகோ (TIGO) என்ற வர்த்தகப் பெயரில் அழைக்கப்பட்டது.

இலங்கையில் எடிசலாட்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான, எடிசலாட் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தால் சம்பூர்ணமாக நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும். எமது பிராந்தியத்தில் உள்ள ஏனைய செயற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, மற்றும் சவூதி அரேபியாவிலும் மேலும் ஆசிய சந்தைகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியாவிலும் தற்பொழுது இலங்கையிலும் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி 18 க்கும் மேற்பட்ட நாடுகளில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதார்களையும் கொண்டு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. எடிசலாட் தனது நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக 25 பெப்ரவரி 2010 அன்று இலங்கையில் ஆரம்பித்தது.

எடிசலாட்டானது தொடர்ச்சியாக விரிவான செயற்பாட்டு எல்லையை வழங்குவதுடன் ஏனைய பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை வழங்குவதில் முன்னுதாரணமான சேவை வழங்குனராகவும் திகழ்கிறது. நாம் எமது வாடிக்கையாளர்களை எம்மவர்போல் உபசரிப்பதிலும் வாடிக்கையாளர் சேவையை முன் நிறுத்தி செயற்படுவதில் துடிப்புள்ளவர்களாகவும் உள்ளோம்.

எமது வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்கின்ற வகையில் தடைகளற்ற தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதன் மூலம் எமது தாரக மந்திரமானது, "உங்களைப் பிரதிபலிக்கிறது" எனப்படுகிறது.


எமது நோக்கம் (Our Vision)

தூரமோ வேறு எந்தக் காரணிகளோ மக்கள் தம் தேவைகளை அடைவதைத் தடுக்காத ஒரு உலகம். மக்கள் சாதாரணமாக உலகத்தை சுற்றி வருகையிலேயே தம் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், தமது புதிய ஆர்வங்களை விருத்தி செய்வதற்குமான சந்தர்ப்பம்.

புதிய சந்தைகளைக் கண்டடையக்கூடிய, ஒருபோதும் தூரத்தினால் கட்டுப்படுத்தப்படாத, சகல அளவிலானதுமான வியாபாரம்.

புதிய பொருட்கள் சேவைகளை தேவையான சகலருக்கும் கிடைக்கக் கூடிய வண்ணம் வழங்குவதில், புத்தாக்கமுள்ள தொழினுட்பங்களை திறந்து வழங்கி புதிய பல வாய்ப்புகளை உலகமுழுவதும் ஏற்படுத்துதல்.


எமது இலக்கு (Our Mission)

மக்களால் எட்டக்கூடிய எல்லையை விஸ்தரித்தல். 

எடிசலாட்டில் , மக்கள் அபிவிருத்தியடையவும், கற்றுக்கொள்ளவும், வளர்ச்சி அடையவும் ஏற்ற வகையில் உயர்தரத்திலான வலையமைப்பினை வழங்குவதில் நாம் மும்முரமாக செயற்படுகிறோம்.


எமது பெறுமதிகள்

சக்தி
வியாபாரத்தின் மிகச் சிறந்த நிலையை அடைய தேவையான இயக்கவாதம், சக்தி என்பவற்றை பேணி வளர்ப்பதை நாம் பெறுமதியாக கருதுகிறோம்.

ஒளிவு மறைவின்மை
ஒரு நிறுவனமாக, வாடிக்கையாளர்களுடனும், தொழிலாளர்களுடனும், வழங்குநர்களுடனும் ஒளிவு மறைவின்றி, நட்புடன் இருப்பதை நாம் வரவேற்கிறோம்.

செயற்படுத்துகை (Enablement)
மக்கள் தமது இலக்குகளை அடைவதற்கான சகல வாய்ப்புகளையும் திறந்த்தளித்து உற்சாகமாக உதவி செய்வதே எமது நோக்காகும். நாம் எப்போதும் விநியோகிப்பது எம்மால் கூடுமானவற்றையே.

எமது பெறுமதிகள்

எடிசலாட் லங்கா (தனியார்) லிமிட்டட்
முக்தார் பிளாசா
78 கிரான்ட்பாஸ் வீதி
கொழும்பு -14
பொதுத் தொடர்பு : 0722541541
ஹொட்லைன் : 0722123123




go back