

விடயத்தினாலும் தூரத்தினாலும் மக்களின் அனுகுதலுக்கு தடையில்லாத ஒரு உலகில் எடிசலாட் இயங்குகிறது. நாம் உங்களை அணுகுகிறோம் ஏனெனில் எடிசலாட் உங்களை பிரதிபலிக்கிறது. சமூகம் மற்றும் சூழலில் சிறந்த பிரதிபலிப்பை மேற்கொள்வதற்காக பொறுப்பான வணிக தளமான எடிசலாட் தேவைக்கும் மேலதிகமான முயற்சிகளை மேற்கொள்கிறது.நாம் எதை செய்தாலும் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள் மூலம் உறுதியளிக்கிறோம். நாம் எமது செயற்திட்டம் மற்றும் மரியாதையை எமது பங்குதாரர்கள் , சமூகம் மற்றும் சூழலுக்கு வழங்குவோம். எமது CSR இனீசியேடிவ்ஸ் சமூக அடிப்படையிலான முதலீட்டு திட்டங்களையும் புலமை பரிசில்களையும் நோக்காக கொண்டுள்ளது. எமது நிருவாகம் மற்றும் ஊழியர்கள் மனமுவந்த சேவையினூடாக இவ்வாறான சமூக திட்டங்களில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இதன் பிரதிபலிப்பாக நிறுவனத்தினூடாக CSR இனீசியேடிவ்ஸிற்கு தொடர்ச்சியான செயல்திட்டத்தை காணக்கூடியதாக இருக்கிறது. எடிசலாட்டிடம் பல வித்தியாசமான CSR இனீசியேடிவ்ஸ் திட்டங்கள் காணப்படுகின்றன. அதாவது கல்வி ,சமூகம் /வாழ்க்கை தொழில் முன்னேற்றம் ,சூழல் , அனர்த்த நிவாரணி போன்ற நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரையான திட்டங்கள் மற்றும் குறுகிய கால திட்டங்கள் காணப்படுகின்றன .
இத்திட்டமானது கிராமிய பாடசாலை மாணவர்களிடையே கணணி பற்றிய அறிவை கொண்டுவருவதற்கு தொடங்கப்பட்டது. குளுகுல்கடுவ வித்தியாலயம் , நொச்சியாகமவில் கல்வி கற்ற ஐம்பத்து ஐந்து மாணவர்கள் இந்த இலவச லப்டொப்களின் உரிமையாளரானார்கள். தரம் ஐந்து வரையான அனைத்து மாணவர்களும் அவர்களது தற்போதைய கல்வி திட்டத்தை உள்ளடக்கிய லப்டொப்களை பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட முக்கிய அதிகாரிகள் மூலம் லப்டொப்கள் பிள்ளைகளுக்கு கையளிக்கப்பட்டது. எடிசலாட்டின் தலைமை விற்பனை அதிகாரி திரு . சஞ்சீவ சமரசிங்க மற்றும் மூத்த நிருவாகி K .M அபேசிங்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டமானது விற்பனை கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்காக நிறுவப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது விற்பனை கழிவுகளை மீள்சுழற்சி செய்தல் மட்டுமல்ல கிராமிய இல்லத்தரசிகளின் வாழ்வை மேம்படுத்துவதுமாகும்.
எடிசலாட்டிளிருந்து வெளியேறும் விற்பனை பொருள்கை பயன்படுத்தி கைக்கு அடக்கமான சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மளிகை பைகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு சந்தர்பத்தை கிராமிய இல்லத்தரசிகளுக்கு வழங்குகிறது .இதன் மூலம் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்கான ஒரு வரவையும் பெறுவார்கள். இப்பைகள் உரிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வரவின் ஒரு பகுதி இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும். தற்போது எட்டு பெண்கள் வேலையில் இணைந்துள்ளனர்.

எடிசலாட்டின் மாணவர்களின் அறிவை உயர்த்தும் நோக்கமானது அனைத்து வசதிகளையுமுடைய மற்றும் பாரியளவிலான புத்தகங்கள் , தொலைகாட்சிபெட்டி , DVD ப்ளேயர் மற்றும் ப்ரொஜெக்டர் என்பவற்றை கொண்டுள்ள வாசிகசாலையை நன்கொடையளிப்பதன் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.எடிசலாட்டின் CSR டிரைவ் ஆனது மாணவர்களுக்கு "இன்றைய உலகை கல்வியின் மூலம் அணுகுதல் " இற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த இனீசியேடிவ் ஆனது எடிசலாட்டின் நொலேட்ஜ் சென்டரை நிறுவுவதற்கு மிக்க தகுதியுடைய சில பாடசாலைகளை தெரிவுசெய்துள்ளது. இங்கு காணப்படும் பெரும்பாலான வாசிக்கக்கூடிய பொருட்கள் மாணவர்களின் நாளாந்த பாடத்திட்டத்திற்கு உள்ளானவை. அவற்றிலிருந்து பொருத்தமான அறிவை பெற்றுக்கொள்வதன் மூலம் பாடப்பகுதிகள் பற்றிய அறிவை பெருக்கலாம்.நாடு பூராவும் 6 எடிசலாட் நொலேட்ஜ் சென்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

CSR இன் அனுசரணையில் அங்கவீனப்பட்ட யுத்த வீரர்களினால் "Tharu dilena rayak" எனும் இசை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.இதில் சேர்ந்த நிதி அனுராதபுரத்தில் அங்கவீனப்பட்டவர்களுக்கான வீடமைக்கும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எடிசலாட் இந்நிகழ்ச்சிக்கான அனுசரணையுடன் மற்றும் ரூ . 3 .5 மில்லியனை ஒரு வீடமைப்பிற்காக வழங்கியுள்ளது.அபிமன்சல எனும் இந்த வீடு அனுராதபுரத்தில் கட்டப்பட்டுள்ளது.

எடிசலாட்டினால் நடத்தப்படும் CSR நடவடிக்கைகளில் ஒன்றாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரியும் ஒரு இயக்கம் அனர்த்த நிர்வாக நிலையத்தினூடாக நிறுவப்பட்டது . இயக்கம் அனுராதபுரம் ,பொலன்னறுவ , பதுளை ,அக்கரைப்பற்று ஆகிய 4 மிக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தெரிவு செய்தது. உதவி மற்றும் உணவளிப்பதன் மூலம் வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவிலிருந்து மீள உதவுகிறது. 1000 ரூபாய் பெறுமதியுள்ள சீனி , தேயிலை , பால் , பருப்பு , அரிசி , செமன் , பற்பசை மற்றும் பல்துலக்கி போன்ற பொருட்களை கொண்டுள்ள 2000 பார்சல்கள் மாவட்டத்திலுள்ள 2000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . இது ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் சிறந்த வாழ்விற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
எடிசலாட் தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து அவர்களையும் இம் மேன்மையான திட்டத்தில் இணைத்துக்கொண்டது. வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்கள் மூலம் ரூ. 361 ,220 .00 ஐ அன்பளிப்பளித்தனர் . எடிசலாட் மேலும் ரூ. 1 ,638 ,780 .௦௦ ஐ திட்டத்தின் வெற்றிக்காக வழங்கியது. எடிசலாட் குழுக்கள் மாவட்ட அனர்த்த நிறுவக ஒருங்கினைப்பாளருடன் இணைந்து வீடுகளுக்கு சென்று பார்சல்களை வழங்கினர். அவர்கள் 4 மாவட்டங்களிலும் எல்லா குடும்பங்களினாலும் வரவேற்கப்பட்டனர்.