Corporate

எடிசலாட் தீர்வுகள் ஏன் அவசியம்?

உங்கள் வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல விரும்புகிறீர்களா? எமது தொலைதொடர்பு வசதிகளும் சேவைகளும் உங்கள் வியாபாரத்தை வினைத்திறனுடனும் முன்னேற்றகரமாகவும் செய்ய உதவுகிறது.

புதிய வியாபாரமொன்றை ஆரம்பிக்கிறீர்களா? அல்லது அதனை முன்னேற்ற விரும்புகிறீர்களா? அனைத்துத் தீர்வினை வழங்கும் ஒரேயொரு மொபைல் தொலைதொடர்பு சேவை வழங்குனராக எடிசலாட் விளங்குகிறது.

எடிசலாட் ஆனது ஐக்கிய அரபு இராச்சியத்தை மையமாக கொண்ட ஒரு தொலைதொடர்பு சேவை வழங்குனராகும். தற்போது ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா உள்ளடக்கிய 18 நாடுகளில் இயங்கி வருகிறது. நவம்பர் 2009 இல் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகிலேயே 13 வது மிகப்பெரிய மொபைல் தொலைதொடர்பு சேவை வழங்குனராக சிறப்பு பெற்றது.

எடிசலாட்டின் உலகளாவிய திறமை அணியானது, புத்தாக்கத் திறன்களை விருத்தி செய்யவும்,உள்ளூர் மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டித் தன்மைக்கான தீர்வுகளை வழங்கவும் உதவியாக உள்ளது.

முக்கிய குறிப்புக்கள்

  • எடிசலாட் ஐக்கிய அரபு இராச்சியதில் 1976ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. இது நவீன தொலைதொடர்பு உட்கட்டமைப்புகளை கொண்டுள்ளதுடன் ஓர் புதியநுட்பங்களுடன் நம்பகரமான இயக்குனராக தொழிற்பட்டு வருகிறது.
  • சந்தை மூலதனத்தின் அடிப்படையில் “த பினான்சியல் டைம்ஸ்” (The Financial Times ) இனால் தரப்படுத்தப்பட்ட முதல் 500 நிறுவனங்களில் எடிசலாட் 140ஆவது இடத்தில் உள்ளது. மற்றும் மூலதனம் மற்றும் வருமானம் அடிப்படையில் த மிடில் ஈஸ்ட் சஞ்சிகையின் (The Middle East magazine) தரப்படுத்தலில் எடிசலாட் மத்தியகிழக்கின் 6ஆவது பாரிய கம்பனியாக தெரிவுசெய்யபட்டுள்ளது.
  • அடுத்த தலைமுறையினருக்கான தொழிநுட்பத்தின் ஊடாக, நிறுவனமானது நிரந்தர இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது, அத்துடன் தனது பாவனையாளர்களை உயர்தரமான வலைப்பின்னலுக்குள் இடம் மாற்றம் செய்கிறது.


எங்கள் பெறுமதி

பலம்
நாங்கள் வர்த்தகத்தில் சிறந்து விளங்க, சக்திகளையும் இயக்கவாதங்களையும் பெறுமதியாகவும் பயிற்றுவித்தும் செயற்படுவோம்.

வெளிப்படை
ஒரு கம்பனி என்ற ரீதியில் நாங்கள் சமூக மற்றும் நட்பு ரீதியாக வாடிக்கையாளருடனும்,வழங்குநர்களுடனும் ஊழியர்களுடனும் பழகுவதை வரவேற்கிறோம்.நாங்கள் எப்போதும் தெளிவான நேரடியான உண்மையான வழியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சாத்திய தன்மை

திறந்த வாய்ப்புக்களை உருவாக்கி , மக்கள் தமது நோக்கத்தினை அடைய  உதவுவதே எமது இலக்கு.நாம் சொல்லுவதே எப்போதும் கொடுப்போம்.

பின்வரும் எமது கொள்கைகள் சந்தாதார்களுக்கு முக்கியமான எமது உற்பத்திகளிலும் சேவைகளிலும்  தெளிவாக இருக்க துணை புரிகிறது. எமது அறிவினை உங்களது அடிப்படை தேவைகளை புதுமையாக பூர்த்தி செய்ய உபயோகிப்போம். நாங்கள் உங்களை உலகத்துடன் இணைக்க உழைப்போம்.


வாக்குறுதிகள்

  • எமது நிறுவனத்தில் தரமான வாடிகையாளர்களை பேணுவது.
  • இலங்கையில் சிறந்த கவரேஜ் ஐ தொடர்ச்சியான முதலீட்டின் மூலம் பேணுவது
  • தொடர்சிகரமான புத்தாக்கங்களுடன் நிறுவனத்தை முன் கொண்டுசெல்வது
  • நீண்ட கால முன்னெடுப்புக்களிலும் மற்றும் குறுங் கால நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி போட்டிகரமான வர்த்தகத்தை நடத்தல்.


எடிசலாட், உங்கள் நம்பகரமான வர்த்தக பங்காளன்

நாங்கள் உங்கள் நம்பகரமான வர்த்தக பங்காளனாக வர விரிவான அறிவிப்புக்களையும் வர்த்தக தீர்வுகளையும் வழங்குகின்றோம்.
நாங்கள் உங்கள் செய்தி பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக உங்கள் வர்த்தகத்திற்கு துணை புரிவோம். எமது வெற்றி உங்களது திருப்தியால் அளக்கப்படும்.





go back