ஈ-சேவைகள்

வாடிக்கையாளர்கள் ஈ – சனலிங் சேவை மூலம் இலங்கையிலுள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் உள்ள வைத்தியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு முன் பதிவினை மேற்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் 225 என்ற இலக்கத்துக்கு டயல் செய்து வைத்தியர்கள் தொடர்பான தகவல்களையும் அவர்களை சந்திப்பதற்கான முன் பதிவுகளையும் மேற்கொள்ள முடியும். இதற்காக எமது வாடிக்கையாளர் சேவை வழங்குனர் உங்களுக்கு உதவுவார்.

கட்டணம் – IVR – ஒரு நிமிடத்திற்கு ரூ.8 மற்றும் வரிகள் அறவிடப்படும் பதிவுக் கட்டணம் வைத்தியர்களைப் பொறுத்ததாக அமையும்.

தற்போது உங்கள் வியாபார விளம்பரங்களை உங்கள் மொபைல் போன் மூலமாக சண்டே ஒப்சேர்வர் மற்றுன் சிலுமின போன்ற பத்திரிகைளில் விளம்பரம் செய்யலாம்.

#429# என்ற இலக்கத்தை டயல் செய்து அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணம் – முதல் 15 சொற்களுக்கு 500 ரூபாவும் மேலதிகமாக உள்ள ஒவ்வொரு 5 சொற்களுக்கும் 100 ரூபா அறவிடப்படும்.

மேலதிக தகவல்களுக்கு 1949 என்ற ஹொட்லைனுடன் தொடர்பு கொள்ளவும்.

தற்போது உங்கள் வியாபார விளம்பரங்களை உங்கள் மொபைல் போன் மூலமாக நேரடியாக lahipita, hit Ad magazine மற்றும் hitad.lk போன்ற பத்திரிகைளில் விளம்பரம் செய்யலாம்

#479# என்ற எடிசலாட் இலக்கத்தை பயன்படுத்தி உங்கள் விளம்பரங்களை வெளியிடலாம்.

கட்டணம் – ரூ.315 ற்கு மேல் (சொற்களுகளைப் பொறுத்தது)

hitad.lk ஒன்லைன் மூலமாக பிரசுரிப்பதற்கு ரூ.500 அறவிடப்படும்.

உங்களது எடிசலாட் மொபைல் இணைப்பு மூலமாக எங்கிருந்தவாறும் இலங்கை புகையிரத சேவையின் புகைவண்டிகளில் டிக்கட்டுகளை பதிவு செய்யலாம்.

இச்சேவையைப் பெறுவதற்கு 365ஐ டயல் செய்யவும்.

டிக்கட்டை பதிவு செய்யும் முறை

  • இச்சேவையைப் பெறுவதற்கு 365ஐ டயல் செய்யவும்.
  • உங்களது பெயர், தே.அ.அ.இலக்கம், பயணிக்கும் இடம், டிக்கட்டுகளின் எண்ணிக்கை என்பனவற்றைக் குறிப்பிடவும்.
  • உங்களுக்கு ஒரு ரிபரன்ஸ் இலக்கம் கிடைக்கும்.
  • பதிவு தொடர்பான விபரங்கள் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும்.
  • உங்களது டிக்கட்டுகளை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் விசேட கருமபீடத்தில் அல்லது கம்பஹா, பேராதனை, கண்டி புகையிரத நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

அம்சங்கள்

  • 24 மணிநேர சேவை. செல்லத் தேவையில்லை. நீண்ட வரிசை காத்திருப்புகள் தேவையில்லை.
  • ஒவ்வொரு வெற்றிகரமான பதிவின்போதும் ஷோர்ட் கோட் கட்டணங்கள், டிக்கட் கட்டணங்கள், பதிவு கட்டணங்கள் அறவிடப்படும். இக்கட்டணங்கள் உங்களு பட்டியலில் சேர்க்கப்படும்.

கட்டணங்கள்- ஒரு நிமிடத்திற்கு ரூ.8 மற்றும் வரிகள் உண்டு.

TOP